விடுவிக்கப்பட்டது மாளிகவத்தை NHS வீட்டுத் திட்ட தொகுதி - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

விடுவிக்கப்பட்டது மாளிகவத்தை NHS வீட்டுத் திட்ட தொகுதி

சுமார் இரு மாதங்களாக முடக்க நிலையில் இருந்த, மாளிகாவத்தை, தேசிய வீடமைப்புத் திட்ட (NHS) தொடர்மாடிக் குடியிருப்பு தனிமைப்படுத்தலிலிருந்து விடவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள மோதறை, மெத்சந்த செவன, மிஹிஜய செவன, ரன்மிண செவன, தெமட்டகொடை, சிறிசந்த உயன, மாளிகாவத்தை தேசிய வீடமைப்புத் திட்டம் ஆகிய குடியிருப்புத் தொகுதிகளில் கொவிட்-19 தொற்று மற்றும் மரணங்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 08ஆம் திகதி முதல் அவற்றில் வாழ்பவர்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

குறித்த தொடர்மாடிக் குடியிருப்புகளில் பல விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாளிகாவத்தை NHS குடியிருப்புத் தொகுதி விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad