வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கமாக செயற்படுவது அவசியம் - இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கமாக செயற்படுவது அவசியம் - இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது அவசியமாகும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்த மீளவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவது கட்டாயமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் தெரிவித்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு குறித்து பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டதாவது, பொதுவான காரணிகளை கொண்டதாக இச்சந்திப்பு காணப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நற்புறவு வரலாற்று ரீதியான தன்மைகளை கொண்டுள்ளது. பல நெருக்கடியான சூழ்நிலையில் இந்நியா இலங்கைக்கு சார்பாக செயற்பட்டுள்ளது.

இந்தியா இலங்கைக்கு அயல் நாடு மட்டுமல்ல. நட்பு நாடும் கூட என்பதை பல சந்தர்ப்பங்களில் நினைவுப்படுத்தியுள்ளோம். இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவது அவசியமாகும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கமாக செயற்படுவது அவசியம் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்து பேணுவது அவசியமானதொன்றாகும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மீள ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment