ட்ரம்பின் குடி நுழைவுத் திட்டத்தை கைவிட பைடன் நிர்வாகம் முடிவு - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

ட்ரம்பின் குடி நுழைவுத் திட்டத்தை கைவிட பைடன் நிர்வாகம் முடிவு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்பற்றிய குடி நுழைவுக் கொள்கைகளை நீக்கப் போவதாகப் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். முந்தைய கொள்கைகள் 'கடுமையானவை' என்று அவர் கூறினார்.

மெக்சிகோ ஜனாதிபதியுடன் பைடன் தொலைபேசியில் உரையாடினார். ஒழுங்கற்ற குடி நுழைவைக் குறைப்பது தொடர்பில் இணைந்து செயல்பட இருவரும் உறுதியளித்தனர்.

சட்டபூர்வ, சட்ட விரோத குடி நுழைவைத் தடுத்து நிறுத்துவது அமெரிக்க முந்திய நிர்வாகத்தின் முக்கியமான முடிவுகளில் ஒன்று. 

சட்ட விரோதக் குடி நுழைவைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அந்தப் பணி இன்னமும் நிறைவடையவில்லை. அந்தத் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்தையும் பைடன் நிறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள சுமார் 11 மில்லியன் பேருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டின் புதிய நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. அது துணிச்சலான முடிவு என்று கருதப்படுகிறது.

வேலை விசாக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் புதிய நிர்வாகம் திட்டமிடுகிறது. ஆனால், உரிய மாற்றங்களைச் செய்யாவிட்டால், பைடனின் அந்த முயற்சிக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad