வெளியேறுவதற்கு முன்னர் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கினார் ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 19, 2021

வெளியேறுவதற்கு முன்னர் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கினார் ட்ரம்ப்

பதவிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜனவரி 26 முதல் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளின் பயணத் தடையை நீக்குவதற்கான அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் ஆதரவைப் பெற்ற பின்னர், தொற்று நோய்க்கு பதிலளிக்கும் விதமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கும் உத்தரவில் டிரம்ப் திங்களன்று கையெழுத்திட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்கு வரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி மற்றும் மே மாதம் 24ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்கு வரத்திற்கு தடை விதித்திருந்தார்.

இந்த நிலையல் தற்போது அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்கு வரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஆனால் சீனா, ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையிலான போக்கு வரத்திற்கு தடை நீடிக்கிறது.

ட்ரம்பின் இந்த உத்தரவு பகிரங்கப்படுத்தப்பட்ட உடனேயே, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேக்கவுள்ள ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, எங்கள் மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், நிர்வாகம் இந்த கட்டுப்பாடுகளை ஜனவரி 26 ஆம் திகதி நீக்க விரும்பவில்லை என்று டுவிட் செய்துள்ளார்.

அத்துடன் தொற்று நோய் மோசமடைந்து வருவதோடு, மேலும் தொற்று வகைகளும் உலகெங்கிலும் உருவாகி வருவதால், இது சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் அல்ல என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment