சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, January 22, 2021

சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம்)

சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்கு வரத்து திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது.

அதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்கு வரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்காக திணைக்களத்துக்கு வருகை தருவது குறிப்பிட்ட தொகையினருக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.

அதனால் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும் நடவடிக்கையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இடம்பெறுகின்றது.

அதனால் வாகன சாரதி அனுமதிப்பத்திம் காலாவதியான சாரதிகள், வாகனங்களை செலுத்தும் போது எதிர்கொள்ளக் கூடிய அசெளகரியங்களில் இருந்து விடுவிப்பதற்காக (மோட்டார் வாகன சட்டத்தின் 203ஆவது சரத்து) இவ்வாறு காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளும் காலம் 2020 டிசம்பர் 31வரை நீடிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad