வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பது எனது வழியல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி - மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் எனது மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி கோட்டாபய - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பது எனது வழியல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி - மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் எனது மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி கோட்டாபய

வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பது எனது வழியல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறினார். மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே மக்கள் என்னை அதிகாரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச சேவையில் திறமையின்மையை நீக்குவது மக்களின் முக்கிய கோரிக்கையாகும். சுங்கத்துறையின் வினைத்திறனின்மை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் வெற்றிக்கு தடையாக இருக்கும் அனைத்து அதிகாரிகளையும் அகற்றியேனும் திறமையின்மை மற்றும் ஊழல் நிறுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். அனைத்து அரச நிறுவனங்களிலும் நல்ல அதிகாரிகள் உள்ளனர்.

ஊழலிலிருந்து விடுபட்ட திறமையான அரச சேவையொன்றை ஏற்படுத்துமாறு அவர்களும் தன்னிடம் கோருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச ஊழியர்கள் பொது மக்கள் பணத்தின் மூலமே பராமரிக்கப்படுவதை நினைவுபடுத்தினார். தான் ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக செய்ததன் காரணமாகவே மக்கள் அவருக்கு 150 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்ற பலத்தை வழங்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியின் ஏழாவது நிகழ்ச்சியில் பங்கேற்க யட்டபாத்த உபசேன மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அங்கு வருகை தந்திருந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

மக்கள் முன்வைத்த காணி பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர், முறையான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்ட காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். 

“எந்த விதமான சொத்துக்களும் இல்லாத மக்கள் நீண்ட காலம் ஒரு காணியில் குடியிருக்கவோ அல்லது பயிர் செய்கையில் ஈடுபடவோ முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களை கவனமாக ஆராய்ந்து காணி உரிமை வழங்கப்பட வேண்டும். காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குவது அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்” என்று ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மக்களின் மனதைக் குணப்படுத்தவே சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் சட்டங்களையும் விதிகளையும் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment