வட மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

வட மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி

கொவிட்-19 தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரேத்தியேக வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், ஒவ்வொரு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியும் தனியார் கல்வி நிலையங்களில் கொவிட்-19 சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதனை கண்காணிப்பாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வகுப்பில் இருக்கைகளின் திறனில் 50 சதவீதம் வரை அல்லது அதிகபட்சம் 100 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்க முடியும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணத் தடை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தும் பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களை நடத்த முடியாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad