காணாமல்போன பெண் கெசல்கமுவ ஓயா ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

காணாமல்போன பெண் கெசல்கமுவ ஓயா ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில், இன்று (சனிக்கிழமை) உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை தோட்ட ஸ்ரீபாத பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய சிதம்பரம் ருக்மணி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண், கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து கைப்பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஹற்றன் நீதிமன்ற நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment