மஜ்மா நகரில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட விவசாயி - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

மஜ்மா நகரில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட விவசாயி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (02.01.2021) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்டத்தை பராமரித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹமது ஹனீபா சுலைமா லெப்பை (வயது 52) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபரின் தோட்டத்திற்கு அருகாமையிலுள்ள ஒருவர் இவரது நடமாட்டம் காணப்படவில்லை. வீட்டின் மின் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்பதால், பார்ப்பதற்குச் சென்ற சமயம் இவர் வீட்டின் முற்றத்தில் மரணமடைந்துள்ளதைக் கண்ட நபர் அவரது குடும்பத்தாருக்கும், பிரதேச கிராம அதிகாரிக்கும் அறிவித்ததைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad