சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்கள் ஊடாக நிதி மோசடி - சிக்காமல் பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, January 22, 2021

சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்கள் ஊடாக நிதி மோசடி - சிக்காமல் பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

(செ.தேன்மொழி)

சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு, தொலைபேசி செயலிகள் ஊடாக பல்வேறு முறைகளில் நிதி மோசடிகள் இடம்பெறுவதாகவும், இத்தகைய மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு, தொலைபேசி செயலிகள் ஊடாக பல்வேறு முறைகளில் நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. 

இந்த மோசடிகள் பெரும்பாலும், பொதுமக்கள் மிகவும் விரும்பும் வளைத்தலங்கள் மற்றும் தொலைபேசிகளை அடிப்படையாகக் கொண்ட இலகு கடன் திட்டங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த முறைகள் ஊடாக கடனை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் விண்ணப்பங்களை அனுப்பும் விண்ணப்பதாரிகளின் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொண்டே மோசடி காரர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடன்களை பெற்றுக் கொள்ளும் போது, தாம் கடனை பெற்றுக் கொள்ளும் நிறுவனம் தொடர்பில் விபரங்களை அறிந்து கொள்வதுடன், அந்த நிறுவனங்கள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

இதற்கமைய கடன்களை பெற்றுக் கொள்வதற்கான தேவைகள் ஏற்பட்டால், தாம் கடனைப் பெற்றுக் கொள்ளப்போகும் நிறுவனத்தின் விபரங்களை அறிந்து கொள்வதுடன், அந்த நிறுவனம் அதிகார சபையின் கீழ் இயங்கும் நிறுவனமா ? என்பது தொடர்பிலும் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இதேவேளை, இவ்வாறான கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளின் போது தங்களது கடன் அட்டைகள் அல்லது இணைய வழி வங்கிச் செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்ட இரகசிய இலக்கங்கள் உட்பட விபரங்களை இன்னுமொரு நபருக்கு தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

வங்கி மற்றும் நிதி நிலையங்களில் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் தொடர்பில் உடன் அறிந்து கொள்வதற்காக, அந்த நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் உடனடி குருந்தகவல் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளவும். இதனால் பொதுமக்கள் இத்தகைய மோசடிக்காரர்களிடமிருந்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad