அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்

நாட்டின் சில பகுதிகளைத் தவிர்த்து ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன.

பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் ஏனைய மத அறநெறிப் பாடசாலைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அறநெறி பாடசாலைகள் இன்றைய தினம் முதல் ஆரம்பமாகின்றன.

எவ்வாறாயினும் இந்த பாடசாலைகளில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணியகம் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து அறநெறி பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment