வைத்தீஸ்வராவின் 40 வருடகால கனவு நனவாகியது - ஆரம்ப பாடசாலைக்கு அனுமதியை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

வைத்தீஸ்வராவின் 40 வருடகால கனவு நனவாகியது - ஆரம்ப பாடசாலைக்கு அனுமதியை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் வைத்தீஸவராக் கல்லூரியின் நீண்ட நாள் கனவாக இருந்த ஆரம்ப பாடசாலைக்கான அனுமதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 2021 ஆம் கல்வி ஆண்டிற்கு தரம் 1 இற்கான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

1913 ஆம் ஆண்டு திரு.நாகமுத்து அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இராமகிருஷ்ன மிஷனினால் நடத்தப்பட்டு வந்த குறித்த பாடசாலை, கல்வி, விளையாட்டு மற்றும் கலை இதர பாட விதானங்களிலும் யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க பாடசாலையாக விளங்கி வந்தது.

இந்நிலையில், 1976 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுபேற்கப்பட்ட நிலையில் ஆரம்பப் பாடசாலைக்கான அனுமதி நீக்கப்பட்டதனால் பாரிய பின்னடைவை எதிர்கொண்டது.

இந்நிலையில், பாடசாலைக்கான ஆரம்ப பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 1980 ஆம் ஆண்டிலிருந்து 40 வருடங்களாக பாடசாலை சமூகத்தினாலும், முன்னாள் மாணவர்களும் மற்றும் பாடசாலைக்கு அருகில் உள்ள சமூகத்தினாளும் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், குறித்த கோரிக்கை நிறைவேறாத நிலையில் தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கைகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment