இலங்கையின் முதலாவது ஆடைப்பூங்கா அடுத்த வருடம் மத்திய காலப்பகுதியில் மட்டக்களப்பு ஏறாவூரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான திட்டம் முதலீட்டு சபையில் முக்கியத்துவம் மிக்கவற்றில் ஒன்றாகும் என்று முதலீட்டு சபையின் தலைவர் சஞ்ஜே மோஹோட்டி தெரிவித்துள்ளார்.
275 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமையவுள்ளது. இதற்கான கட்டடப்பணிகள் தற்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு 5 முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு அமைய வலயத்தில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக வெளிநாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் உள்ளூர் ஆடை தொழில்துறைக்கான இயற்கை மற்றும் செயற்கை ஆடை மூலப்பொருட்கள் உற்பத்தி தயாரிக்கப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டில் இலங்கை 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடைகளை இறக்குமதி செய்திருந்தது. 250000 மெட்ரிக் தொன்னுக்கு மேட்பட்ட ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment