ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் கூடியது - கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார் சஜித் பிரேமதாச - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் கூடியது - கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார் சஜித் பிரேமதாச

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை முதன்முறையாகக் கூடியது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் செயற்குழு கூடியதோடு, அதில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களும் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டன.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய பதவிகளில் மாற்றங்கள் எவையும் செய்யப்படவில்லை.

பிரதி செயலாளராக எதிர்கட்சி செயலாளரின் இணைப்புச் செயலாளர் உமா சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷர் சரத் பொன்சோக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார் மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியின் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டு தலைவராகவும் பிரதி தவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, திஸ்ஸ அத்தனாயக்க தொடர்ந்தும் தேசிய அமைப்பாளராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ் பிரதி தவிசாளர்களாக ராஜித சேனாரத்ன, குமார வெல்கம, கபிர் ஹாசிம், லக்ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் ரவி சமரவீர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதித் தலைவர்களாக ஹரின் பெர்னாண்டோ, தலதா அத்துகோரல, கயந்த கருணாதிலக்க, பி.ஹரிசன், சுஜீவ சேனசிங்க, சந்திரானி பண்டார, திலிப் வன்னியாராச்சி மற்றும் ஏ.எச்.எம்.ஹலீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை நிர்வாக அதிகாரியாக அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதோடு, பிரதி பொதுச் செயலாளர்களாக நளின் பண்டார, அஷோக அபேசிங்க, ரோஹினி விஜேரத்ன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி தேசிய அமைப்பாளராக ஜே.சி. அலவத்துவல மற்றும் புத்திக பத்திரன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செற்குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாகவும், விரைவில் முக்கிய பதவியொன்றை பெற்றுக் கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad