சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மீதான பந்து வீச்சு தடை நீக்கம் - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மீதான பந்து வீச்சு தடை நீக்கம்

சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மீதான பந்து வீச்சுப் பாணி தொடர்பான தடை, சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) நீக்கப்பட்டுள்ளது.

27 வயதான அகில தனஞ்சயவின் பந்து வீச்சு பாணி தொடர்பில் கடந்த 2018 மற்றும் மீண்டும் 2019 ஆம் ஆண்டில் அவர் மீது போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அவரது கை வளைவானது 15 பாகையிலும் அதிகமாக காணப்பட்டமை தொடர்பில் இறுதியாக கடந்த 2019 செப்டெம்பர் மாதம், ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த தடை நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் திகதி, அவரது மாற்றியமைக்கப்பட்ட பந்து வீச்சு பாணி தொடர்பில் அனுப்பப்பட்ட அறிக்கை மற்றும் வீடியோக்களின் அடிப்படையில், அவருக்கு மீண்டும் பந்து வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவர் சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad