மாத்தளை மாநகர சபை முதல்வராக சந்தனம் பிரகாஸ் தெரிவானார் - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

மாத்தளை மாநகர சபை முதல்வராக சந்தனம் பிரகாஸ் தெரிவானார்

மாத்தளை மாநகர சபை முதல்வராக பிரதி மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகர முதல்வர் பதவி வெற்றிடமாகியதை தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி புதிய மாநகர முதல்வர் ஒருவரை தெரிவு செய்யும் போட்டி மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் மாத்தளை மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன்போது பிரதி மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ் மற்றும் மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் பாலித்த ஜயசேகர ஆகியோர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டனர்.

எனினும் இரகசிய வாக்களிப்பின்போது பிரதி மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ்க்கு ஆதரவாக 10 வாக்குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாலித்த ஜயசேகர 9 வாக்குகளை பெற்றுக் கொண்டனர். அதற்கமைய மேலதிக ஒரு வாக்கால் சந்தனம் பிரகாஸ் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

மாத்தளை மாநகர முதல்வராக பதவி வகித்த டல்ஜித் அலுவிகார மீது மாநகர சபை உறுப்பினர் பலர் ஊழல் மோசடி மற்றும் பதவி துஷ்பிரயோகம் என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிருபிக்கப்பட்டமையால் அவர் மாநகர முதல்வர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்து முற்றாக நீக்கப்பட்டார். 

அதைத் தொடர்ந்து பிரதி முதல்வராக கடமையாற்றிய சந்தனம் பிரகாஸ் 03 மாத காலத்திற்கு பதில் முதல்வராக ஆளுநரால் நியமிக்கப்பட்டார். எனினும் கடந்த 06ஆம் திகதி குறிப்பிட்ட 03 மாத காலம் பூர்த்தியடைந்தமையால் அவரே புதிய மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

உக்குவளை விசேட நிருபர்

No comments:

Post a Comment