கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தரக் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தரக் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தரக் கோரி தீவக மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே 11 மண்கும்பான், 5 ஆம் வட்டாரத்திலுள்ள தீவகத்தில், கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ளது.

அவை பொதுமக்களுக்கு சொந்தமான காணியாகும். எனவே குறித்த 15 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு கோரி, இன்று (திங்கட்கிழமை) காணி உரிமையாளர்களினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30 வருட காலமாக தனியாருக்குச் சொந்தமான இந்த 15 ஏக்கர் காணியில் தீவகத்திற்கான கடற்படையின் பிரதான முகாம் அமைக்கப்பட்டு காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணியினை சுவிகரிப்பதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், குறித்த 15 ஏக்கர் காணியின் உரிமையாளர்கள் தமது காணியினை பெற்றுத் தருமாறு கோரி, யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment