நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர் - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்

நியூசிலாந்தில் இரண்டு மாதங்களின் பின் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியில் முதல் முறை கொரோனா தொற்று சம்பவம் பதிவாகியுள்ளது.

இரண்டு வாரங்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து 10 நாட்களின் பின் அண்மையில் பிரிட்டனில் இருந்து திரும்பிய 56 வயதான பெண் ஒருவருக்கே நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தப் பெண்ணுடன் தொடர்புபட்டவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு அவர் சென்ற இடங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அதிக வரவேற்பைப் பெற்ற நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து உள்ளது.

ஐந்து மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்தில் 1,927 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad