ஹட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் உட்பட நால்வருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

ஹட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் உட்பட நால்வருக்கு கொரோனா

ஹட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

இன்று (03) காலை வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபை தலைவருடன் தொடர்பை பேணிய நிலையில் தொற்றுக்குள்ளான ஹட்டன் டிக்கோயா நகர சபையின் உறுப்பினர் ஒருவரின் மகளும், தொற்றாளர் சென்ற பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்டதால் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹட்டன் டிக்கோயா நகர சபை 08 உறுப்பினர்களில் ஒருவருக்கும், டிக்கோயா தரவலையில் பெண் ஒருவரும், ஹட்டன் மல்லியப்பு பகுதியில் ஆண் ஒருவருமாக நால்வருக்கே தொற்று உறுதியாகியது.

இவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் டிக்கோயா நகர சபை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad