மொடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதியளித்தது ஐரோப்பிய ஒன்றியம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

மொடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதியளித்தது ஐரோப்பிய ஒன்றியம்

பைசரை தொடர்ந்து மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதேபோல் மற்றொரு அமெரிக்க நிறுவனமான மொடர்னாவும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

மொடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதால் அந்த தடுப்பூசி அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த 27ம் திகதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

ஆனால், வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், தடுப்பூசி செலுத்தும் திட்ட நடைமுறைகளில் கால தாமதம் ஏற்படுவதாலும் வைரஸ் பரவல் கட்டுப்படுத்த நிலையை எட்டி வருகிறது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் அந்த தடுப்பூசியின் தேவையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளில் இன்னும் சில நாட்களில் மொடர்னா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது.

பைசர் தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கொரோனா பரவலை குறைக்க முக்கியப்பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment