சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்..! - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்..!

பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுறுதியான பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரவுடன் தொடர்பை பேணிய காரணத்தினாலேயே மேற்படி சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியிருக்கின்றமையினால், தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad