அங்கஜனின் பரிந்துரைக்கு அமைவாக யாழ். மாவட்டத்தில் பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

அங்கஜனின் பரிந்துரைக்கு அமைவாக யாழ். மாவட்டத்தில் பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு

அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 

பாராளுமன்ற உறுப்பினரும், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பரிந்துரைக்கு அமைவாக தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 

யாழ். மாவட்டத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயம், வேலணை மத்திய கல்லூரி, ஊர்காவற்துறை சென்.அந்தோனியார் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி, மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் உடுத்துறை மகா வித்தியாலயம் ஆகியனவே இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

சாவகச்சேரி விசேட நிருபர்

No comments:

Post a Comment