இலங்கை கிரிக்கெட் தேர்தலுக்காக மூவரடங்கிய குழு நியமனம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

இலங்கை கிரிக்கெட் தேர்தலுக்காக மூவரடங்கிய குழு நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மேற்பார்வை செய்யும் நோக்கில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் (07) இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் விசேட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கையின் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலனி குணரத்ன, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஷிரோமி பெரேரா மற்றும் ஒரு சில அமைச்சுக்களில் பிரதான செயலாளர்களில் ஒருவராகச் செயற்பட்டுள்ள பேராசிரியர் டீ.எம்.ஆர் திசாநாயக்க உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு இலங்கை கிரிக்கெட் உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது இந்தக் குழுவின் பொறுப்பாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad