கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா! - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா!

வவுனியாவில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், வவுனியா ஓமந்தை அரச முறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையின் போது அங்கு வந்த மனைவியின் சித்தப்பாவினால் குறித்த பெண்ணின் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதோடு கட்டையினாலும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கிராம மக்களினால் ஓமந்தை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டு காயத்திற்குள்ளானவர் 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad