எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் ஜெயசங்கர்..! இந்தியாவுக்கு வருமாறு விஷேட அழைப்பையும் விடுத்தார் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் ஜெயசங்கர்..! இந்தியாவுக்கு வருமாறு விஷேட அழைப்பையும் விடுத்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே விஷேட சந்திப்பு நேற்று (06.01.2021) நடந்தது.

இரு தரப்பினரும் இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு அண்மையில் அளித்த ஆதரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்ததோடு, “மோடி” கிராமத்தையும் நினைவு கூர்ந்தார். சுவ செரியாவுக்கு இந்திய அரசு அளித்த ஆதரவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு விஷேட அழைப்பையும் விடுத்தார்.

No comments:

Post a Comment