பாதாள உலக குழு உறுப்பினரின் சகா வெளிநாட்டு கைக்குண்டு, ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

பாதாள உலக குழு உறுப்பினரின் சகா வெளிநாட்டு கைக்குண்டு, ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது

(செ.தேன்மொழி)

பாதாள உலககுழு உறுப்பினரான மொரட்டு சமன் என்பவரின் உதவியாளர் ஒருவரை வெளிநாட்டு கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யதுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சோதனை நடவடிக்கைகளின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேக நபர், சில காலங்களுக்கு முன்னர் இனந்தெரியாத குழுவொன்றினால் கொலை செய்யப்பட்ட, பாதாளகுழு உறுப்பினரான மொரட்டு சமன் என்பவரின் உதவியாளராக செயற்பட்டவர் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஏதேனும் அனர்த்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கைக்குண்டை வைத்திருந்தாரா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 

அவர் மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், மொரட்டுவ பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad