ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு - அரசு செய்தித் தொடர்பாளர் உட்பட 3 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு - அரசு செய்தித் தொடர்பாளர் உட்பட 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானினில் இன்று (10) காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. கார்ட் இ நாவ் பகுதியில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரான செய்தித் தொடர்பாளர் ஜியா வதான் வந்த வாகனத்தை குறி வைத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில் அந்த வாகனம் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்தனர். 

இந்த குண்டு வெடிப்பில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரான செய்தித் தொடர்பாளர், அவரது பாதுகாவலர், சாரதி ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். செய்தித் தொடர்பாளர் ஜியா வதானுக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான் அமைப்பு இந்த வெடி குண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad