காதி நீதிமன்ற முறையில் நிச்சயம் மாற்றம் செய்யப்படும் என்கிறார் சரத் வீரசேகர - விண்ணப்பம் கோரப்பட்டமைக்கு தனக்கு தொடர்பு கிடையாது என்கிறார் அலி சப்ரி - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

காதி நீதிமன்ற முறையில் நிச்சயம் மாற்றம் செய்யப்படும் என்கிறார் சரத் வீரசேகர - விண்ணப்பம் கோரப்பட்டமைக்கு தனக்கு தொடர்பு கிடையாது என்கிறார் அலி சப்ரி

காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

காதி நீதிமன்றங்களின் வெற்றிடங்களுக்கு காதி நீதிபதிகளை நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பெபிலியான சுனேத்ரா தேவி விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், காதி நீதிமன்றங்கள் தொடர்பாக மீண்டும் பேசப்படுகிறது. ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு அமைய தனித்தனி நீதி மன்றங்கள் இருக்க முடியாது. காதி நீதிமன்றங்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது என்றார். 

இதேவேளை நீதிச் சேவை ஆணைக்குழு காதி நீதிமன்றங்களின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரியுள்ளது. இது தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, எனக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. நீதிச் சேவை ஆணைக்குழுவே விண்ணப்பம் கோரியுள்ளது. இதன் தலைவராக பிரதம நீதியரசர் செயற்படுகிறார் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad