ட்ரம்புக்கு எதிரான செனட் விசாரணை ஒத்தி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

ட்ரம்புக்கு எதிரான செனட் விசாரணை ஒத்தி வைப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான இரண்டாவது அரசியல் குற்றச்சாட்டு விசாரணை வரும் பெப்ரவரி மாத இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபையில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும், அந்த விசாரணையை அடுத்த மாதம் வரை ஒத்தி வைக்க இணக்கம் கண்டனர்.

அமெரிக்க மக்களவையைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியினர் கலவரத்தைத் தூண்டிவிட்ட குற்றச்சாட்டை வரும் திங்களன்று அதிகாரபூர்வமாக செனட் சபைக்கு அனுப்பி வைப்பர்.

ஆனால், அது தொடர்பான விவாதங்கள் அடுத்த மாதம் எட்டாம் திகதி வரை ஆரம்பிக்கப்படமாட்டாது.

அதன் மூலம், ட்ரம்ப்பின் சட்டத்தரணிகளுக்கு தற்காப்பு வாதத்தைத் தயார் செய்யப் போதிய அவகாசம் கிடைக்கும். மேலும் இந்தத் தாமதத்தால் புதிய ஜனாதிபதி ஜோ பைடனின் அமைச்சரவையை உறுதிப்படுத்தவும் அவகாசம் கிடைக்கும்.

ட்ரம்ப் மீதான விசாரணை நடைபெறும் அதேநேரத்தில் புதிய அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டவர்களை உறுதி செய்ய இயலாது என, செனட் சபையிலுள்ள குடியரசுக் கட்சியினர் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad