இவ்வாரம் பாராளுமன்ற அமர்வு இரு நாட்களுக்கு மாத்திரம் இடம்பெறும் - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

இவ்வாரம் பாராளுமன்ற அமர்வு இரு நாட்களுக்கு மாத்திரம் இடம்பெறும்

இவ்வாரம் பாராளுமன்றத்தை இரண்டு நாட்கள் மாத்திரம் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளது.

கொரோனா பரவல் நிலையைக் கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் 32 எம்.பிக்கள், பாராளுமன்ற ஊழியர்கள், பாராளுமன்றத்தில் கடமையாற்றும் ஏனைய பணியாளர்கள், அதனுடன் இணைந்த பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 911 பேர் உள்ளிட்ட 943 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 9 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த சோதனையில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என்பதோடு, பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த ஐவர், பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியேயான பாதுகாப்பு வலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மூவர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, படைக்கல சேவிதல் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment