லைபீரிய கப்பலை கண்காணிக்கும் இலங்கை கடற்படை - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

லைபீரிய கப்பலை கண்காணிக்கும் இலங்கை கடற்படை

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ள லைபீரிய கப்பலை கண்காணிப்பதற்காக இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பாந்தோட்டை சிறிய இராவணா கோட்டை கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை குறித்த கப்பல் விபத்துக்குள்ளானது.

லிபிய அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த சீமெந்து கப்பலை கண்காணிப்பதற்காக இலங்கை கடற்படையின் இலக்கம் 3 சமுத்திர படையணிக்கு உரித்தான பீச் கிராஃப்ட் 200 ரக விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் குறித்த விமானம் விபத்துக்குள்ளான கப்பலின் தற்போதைய நிலை குறித்து கண்காணித்து வந்ததன் பின்னர் அது தொடர்பான தகவல்கள் கடற்படையினால் உரிய தரப்பினருக்கு வழங்கப்படும்.

இதேவேளை இன்று காலையும் கப்பலின் நிலை குறித்து ஆராய மீண்டும் இலங்கை கடற்பரப்பின் விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad