ஆறு கஜ முத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

ஆறு கஜ முத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது

(செ.தேன்மொழி)

மாத்தறை பகுதியில் ஆறு கஜ முத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கஜ முத்துக்களை விற்பனை செய்ய முற்படட சந்தேக நபரொருவர் கைது செய்யப்படடுள்ளார். 

காலி - உனவட்டுன பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கஜமுத்துகள் வனஜீவ ராசிகள் பாதுகாப்பு காரியாலயத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

மேற்படி விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் மோசடி சடடவிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad