தகனம் செய்வதா? அடக்கம் செய்வதா? அரசாங்கம் உடனடியாகத் தீர்வினை வழங்க வேண்டும் - முன்னாள் சபாநாயகர் கரு - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

தகனம் செய்வதா? அடக்கம் செய்வதா? அரசாங்கம் உடனடியாகத் தீர்வினை வழங்க வேண்டும் - முன்னாள் சபாநாயகர் கரு

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்ற பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வினை வழங்க வேண்டும். மாறாக இவ்விவகாரத்திற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்காமல், நீண்ட நாட்களாக இழுத்தடிப்புச் செய்வதென்பது அரசாங்கத்தின் மீது மோசமான பிரதிபலிப்பையே ஏற்படுத்துகின்றது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போருக்கான இறுதிச் சடங்குகளை நடத்தும் முறை தொடர்பில் தோன்றியிருக்கும் பிரச்சினையில் விசேட நிபுணர்கள் அடங்கிய தொழில்நுட்பக்குழு முடிவை வழங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. ஆகவே இன்னமும் இறுதித் தீர்மானமொன்று எட்டப்படாமல் இருக்கும் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும்.

இப்பிரச்சினைக்குப் பல நாட்களாக தீர்வொன்று வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுவதானது, அரசாங்கத்தின் மீது மோசமான பிரதிபலிப்பை ஏற்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad