ஒழுக்காற்று நடவடிக்கை விவகாரத்தில் நீதியின் பக்கம் நின்றதனால் பிரதேச சபை உறுப்பினர் பதவியை துறக்க தயாரானார் குமாரஸ்ரீ ? - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

ஒழுக்காற்று நடவடிக்கை விவகாரத்தில் நீதியின் பக்கம் நின்றதனால் பிரதேச சபை உறுப்பினர் பதவியை துறக்க தயாரானார் குமாரஸ்ரீ ?

நூருல் ஹுதா உமர்

சபை உறுப்பினர்களுக்கு எதிராக யாரும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கூடாது என தீர்மானித்தோம். அது ஒரு குடும்பம் போன்றது. குடும்ப முரண்பாடுகள் வேண்டாம். எனது நிலைப்பாடு நீதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த காரியங்கள் வேறுவிதமாக மாறி இன முரண்பாட்டை உண்டாக்கும் என்றேன். இந்த பிரச்சினையை காரணம் காட்டி பல விமர்சனங்கள் எனக்கு எதிராக வருகிறது. அதனாலயே இந்த முடிவை எட்டினேன். என்னுடை இராஜினாமா கடித்தை விரைவில் கையளிக்க உள்ளேன் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் குமாரஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சொந்த முகநூலில் இன்று மதியம் நேரலையில் தோன்றி மக்களுக்கு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், நேற்று காரைதீவு பிரதேச சபையின் 35 ஆவது சபை அமர்வு நடைபெற்றது. அங்கு சபையின் பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீருக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர் சசி அவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். அப்போது அங்கிருந்த நான் இந்த பிரேரணை தேவையற்றது எனவும் ஒரே குடும்பமாக வாழும் எமக்கிடையில் சண்டைகளோ முரண்பாடுகளோ வேண்டாம் என்றும் கூறி பிரேரணையை தவிர்க்க வேண்டினேன். பலருடைய வேண்டுகோளின் படி பிரேரணை தொடர்பில் பேசியபோது பிரதித்தவிசாளர் ஜாஹீரின் காணியில் அவர் கொட்டகை அமைத்துள்ளார். அது சட்டவிரோதமானது என நீர்ப்பாசன திணைக்களம் 18 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது அதில் 13 பேர் தமிழர்கள். மீதி 05 முஸ்லிங்கள்.

வயலை நிரப்பி கட்டிடம் அமைத்தது தொடர்பில் கடந்த 20 ம் திகதி வழக்கு நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் பிரதேச சபை தவிசாளருக்கு கிடைத்த ஏதோ ஒரு தகவலையை அடுத்து களத்திற்கு சென்ற தவிசாளருக்கும், உறுப்பினர் சசிக்கும் பிரதிதவிசாளர் ஏசியதாக கூறப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் சமரசம் செய்து பிரச்சினையை தீர்க்க முயன்றோம்.

அதனால் நேற்று முதல் எனக்கு எதிராக சிலர் இனவாத கருத்து மிக்க விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நான் எனது மனசாட்சிப்படி நியாயத்தின் பக்கமும் தர்மத்தின் பக்கமும் நிற்பவன் அதை என்னை அறிந்த எல்லோரும் அறிவர். அதனால் நன்றாக சிந்தித்து தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். அதுவேதான் என்னுடைய பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன். என் மீதான தேவையில்லாத விமர்சனங்கள் தேவையில்லை. கடந்த 06 மாதங்களாக பிரதேச சபை உறுப்பினராக இருந்து சிறந்த மக்கள் பணி செய்துள்ளேன்.

அரசியலுக்கு வர முன்னரே சமூகத்தில் நல்ல பெயரை கொண்டவன் நான். எனது பெயருக்கு களங்கம் இல்லாமல் வாழவே விரும்புகிறேன். அதனாலயே இந்த முடிவை எடுத்துள்ளேன் நேற்று சபை அமர்வில் நடந்த விடயம் தொடர்பில் வரும் விமர்சனங்களை நான் அலட்டிக் கொள்ளவில்லை இருந்தாலும் என் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு தெளிப்படுத்தவே விளைகிறேன் .

என்னுடைய பயணம் நேர்மையாக உள்ளதாக இருக்க விரும்புகிறேன் கடந்த காலங்களில் உறுப்பினர் மோகநாதசுக்கு எதிரான பிரேரணை சபைக்கு வந்தது. அப்போது சபை உறுப்பினர்களுக்கு எதிராக யாரும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கூடாது என தீர்மானித்தோம். அது ஒரு குடும்பம் போன்றது. குடும்ப முரண்பாடுகள் வேண்டாம். எனது நிலைப்பாடு நீதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த காரியங்கள் வேறுவிதமாக மாறி இன முரண்பாட்டை உண்டாக்கும் என்றேன். இந்த பிரச்சினையை காரணம் காட்டி பல விமர்சனங்கள் எனக்கு எதிராக வருகிறது. அதனாலயே இந்த முடிவை எட்டினேன். என்னுடை இராஜினாமா கடித்தை விரைவில் கையளிக்க உள்ளேன்.

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளபோது இதனை விவாதிக்க முடியாது என்று நான் கூறியபோது நான் பிரதித் தவிசாளருக்கு வக்காலத்து வழங்குவதாக தவிசாளர் கூறினார். அந்த கருத்தை வாபஸ் வாங்க சொன்னேன். என்ன பேசுகிறோம் என தெரியாமல் தடம் மாறி பேசினார். யாருக்கும் வக்காலத்து வாங்கும் எந்த தேவையும் இல்லை. எனக்கு யாரிடமிருந்தும் எவ்வித கையூட்டலும் தேவையில்லை. அதனாலயே பதவி திறக்கிறேன். பொதுமகனாக இருந்து எனது ஊருக்கு சேவை செய்வேன். அரசியல் பயணத்திலிருந்து விடுதலையாகி பயணிக்க உள்ளேன். என்னுடைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி. சந்திரகாந்தனுடன் இது தொடர்பில் அவருடன் கலந்துரையாடி அவரின் இணைப்பாளராக இருந்து சேவையாற்ற உள்ளேன்.

தவிசாளரை எதிர்த்துக்கொண்டு மக்கள் பணி செய்ய கடினமாக இருந்ததால் அவருடன் நெருக்கமாக இருந்து செயலாற்றி உள்ளேன். அவரை எதிர்க்கவில்லை. அவரது நிலைப்பாடு தொடர்பிலும் அவரை பற்றியும் மக்கள் அறிவர். எனது சுயாதீன அணி முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு அவர்களின் முன்னிலையில் எனது பதவியை பொருத்தமான ஒருவருக்கு கையளிக்க உள்ளேன். அரசியலில் முதுமை பெற்றவனல்ல நான். எனது மக்களுக்கான பயணத்தில் எம்மவர்களே தடையாக இருக்கிறார்கள். இனி தேர்தலில் களமிறங்க மாட்டேன். எனக்கு உதவிய, என்னுடன் இரண்டற கலந்து பயணித்த சகலருக்கும் நன்றி. என்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றிய திருப்தி எனக்கு இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad