அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா

நீர் வழங்கல்‌ அமைச்சர்‌ வாசுதேச நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் பயணம் செய்த இடங்கள் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினராக வாசுதேவ இடம்பிடிக்கிறார்.

அதற்கமைய முன்னதாக பாராளுமன்ற கொத்தணியில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அத்துடன், பிரதமரின் அரசியல் விவகாரங்களின் ஒருங்கிணைப்பு செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் மற்றும் ரஊப் ஹக்கீம் எம்.பியுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் மற்றும் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் உரிய சுகாதார வழிமுறைகளைப் பேணுமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad