பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் என்கிறார் டொனால்ட் டிரம்ப் - நல்ல விஷயம்தான் என்கிறார் ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் என்கிறார் டொனால்ட் டிரம்ப் - நல்ல விஷயம்தான் என்கிறார் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதியாக வரும் 20ம் திகதி ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் அந்நாட்டு பாராளுமன்றத்தின் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது, அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

இந்த வன்முறையின் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் 4 பேர் மற்றும் ஒரு போலீஸ் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளராக பைடனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

அதில் தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை செலுத்தி அதை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்திருந்தனர். அந்த சீலிட்ட கவரை பிரித்து மாகாண சபை உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணினர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வானார். அவர் வெற்றி பெற்றதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

டொனால்ட் டிரம்ப் 232 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் வரும் 20ம் திகதி பொறுப்பேற்க உள்ளார். 

இந்நிலையில், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் அந்த பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’ஜனவரி 20ம் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கப் போவதில்லை என்பதை கேள்வி கேட்ட அனைவரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற வன்முறை தொடர்பாக டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் பக்கம் 12 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது என்பதுடன் அதன் பின்னர் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார் அதன்போது தடுப்பூசிகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன என்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு தயாராகும் தடுப்பூசிகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன. இது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். எங்கள் அமைச்சரவையில் பெயர்களை அறிவித்து விட்டதில் பெருமிதம் கொள்கிறேன். ஆண்களைப் போலவே அதிகமான பெண்களைக் கொண்ட முதல் அமைச்சரவை இதுவாகும். பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை இதுவாகும்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டு தொடர்பான புதிய சட்டங்கள் திங்கட்கிழமை அறிமுகப்படுத்த ஹவுஸ் டெமக்ராட்டுகள் திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் எடுக்கும் முடிவு அது. நான் எனது வேலையில் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஜனாதிபதி டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டு தொடர்பான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்த ஹவுஸ் டெமக்ராட்டுகள் திட்டமிட்டுள்ளது.

ஜனவரி 20ம் திகதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதில்லை என டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது அவரின் முடிவு, இது ஒரு நல்ல விஷயம் என்றார்.

No comments:

Post a Comment