அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் புதிய கொரோனா பரவல்கள் உருவாகக் கூடும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் புதிய கொரோனா பரவல்கள் உருவாகக் கூடும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாடளாவிய ரீதியில் அடுத்த சில நாட்களில் புதிய கொத்தணிகள் உருவாகக் கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து புதிய கொத்தணிகள் உருவாகக் கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் கொழும்பு மாநகர சபை பிரிவிற்குள் கொரோனா பரவல் ஒரளவு குறைவடைந்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

களுத்துறை, பேருவளை, பொல்காவல, மொனராகல, திருகோணமலை, காத்தாண்குடி, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நிலைமை மோசமடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் புதிய பரவல்கள் ஆரம்பமாகலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad