நாட்டின் தற்போதைய நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவது தொடர்பில் ஆராய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக மக்களை பட்டினியில் இருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களே தற்போது அவசியமாகும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவது தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கும் விடயத்தில் சோசலிச மக்கள் சக்தியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொராேனா தொற்று காரணமாக நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மோசமான நிலையில் இராணுவ பயிற்சி என்பது தற்போதைக்கு தேவையற்ற விடயமாகும்.
இராணுவ பயிற்சி வழங்குவதற்கு செலவாகும் நிதியை பாடசாலைகளில் சுகாதார வசதிகளை ஏற்படுத்த பயன்டுத்தலாம் என்றார்.
No comments:
Post a Comment