கேகாலையில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் வைரஸ் தன்மையின் மாற்றம் குறித்து பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியதென்ன? - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

கேகாலையில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் வைரஸ் தன்மையின் மாற்றம் குறித்து பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியதென்ன?

(எம்.மனோசித்ரா)

கேகாலை மாவட்டத்தில் இனங்காணப்படும் தொற்றாளர்களிடம் காணப்படும் வைரஸ் தொற்றில் மாற்றங்கள் தென்படுவதாக இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் இல்லை என்று பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கேகாலையில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் வைரஸின் தன்மையில் மாற்றங்கள் காணப்படுவதாகக் கூறபடுவதாக 'ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது பல பகுதிகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். கேகாலையிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். நீங்கள் கூறுவதைப் போன்று அங்கு இனங்காணப்படும் தொற்றாளர்களிடம் வைரஸ் தன்மை மாற்றத்தை காண்பிக்குமாயின் அது தொடர்பில் குறித்த தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால் அவ்வாறு எந்தவித அறிவித்தலும் எமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை.

உக்ரேனிலிருந்து வந்தவர்களில் இதுவரையில் (நேற்று மாலை வரை) 5 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதிப்பட்டுள்ளது. மாறாக வருகை தரும் சகல சுற்றுலா பிரயாணிகளும் வைரஸ் தொற்றுறுடன் வருகிறார்கள் என்று கூற முடியாது.

சுற்றுலா பிரயாணிகள் ஒரே அறையில் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு எதிர்பார்த்து நாட்டுக்கு வருபவர்கள் இல்லை என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம். 

எனவேதான் அவர்கள் பாதுகாப்பான முறையில் சுற்றுலாத்துறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் செல்லும் இடங்களுக்கு உடனடியாக செல்வதை உள்நாட்டவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர அவ்விடங்களுக்குச் செல்ல யாருக்கும் தடை விதிக்கப்படவில்லை.

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது காணப்படும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே இறுதிக் கிரிகைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment