ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..! தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..! தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொவிட் வைரஸ் பரவலினால் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுமே பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில் இலங்கை மற்றும் இந்தியா பொருளாதார ரீதியில் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன் தடுப்பூசியை கூடிய விரைவில் இலங்கைக்கு வழங்க டெல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று வியாழக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு இந்திய இல்லத்தில் இடம்பெற்றிருந்ததுடன் விஜயத்தின் இறுதி சந்திப்பாக இது அமைந்திருந்தது.

இலங்கையில் தீவிரமடைந்து வரும் கொவிட்-19 கட்டுப்படுத்த இந்திய ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பதுடன் கொவிட்-19 தடுப்பூசியை கூடிய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொவிட் வைரஸ் பரவலினால் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுமே பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை - இந்தியா பொருளாதார ரீதியில் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும் என இதன்போது ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்றினால் இரு நாடுகளுமே எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்ட நிலையில் பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளில் டெல்லி கூடிய கவனம் செலுத்தும் என இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment