நீர்வழங்கல் அமைச்சின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என நீர் வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் செயலாளர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊழியர்களுக்கு அண்மையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அந்த பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில், அமைச்சரின் செயலாளர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என நீர் வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாண பிரதிநிதிகளும் தன்னார்வமாக பி.சி.ஆர் பரிசோதனையை செய்துகொண்டதுடன், அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய அமைச்சரின் காரியாலய பணிகள் யாவும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நாளையதினம் (18) மீள ஆரம்பமாக உள்ளது.
அமீன் எம் றிழான்
No comments:
Post a Comment