அட்டாளைச்சேனை சுகாதார பிரிவில் பள்ளிவாசல்களை திறந்து மீண்டும் தொழுகைக்கு அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

அட்டாளைச்சேனை சுகாதார பிரிவில் பள்ளிவாசல்களை திறந்து மீண்டும் தொழுகைக்கு அனுமதி

அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் நேற்று (06) முதல் பள்ளிவாசல்கள் திறந்து மீண்டும் தொழுகைக்காக அனுமதி வழங்கப்படுவதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய காரியாலயத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் ஊடக சந்திப்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளர் எம்.எச்.எம். உவைஸ் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது பிரதேச சுகாதாரப் பிரிவில் உள்ள ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சுகாதார நடைமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் கடைப்பிடித்து தொழுகைக்காக 25 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவதுடன் ஏனைய மதக் கடமைகளுக்காகவும் 25 பேருக்கே அனுமதி வழங்கப்படுகின்றது. 

எமது சுகாதாரப் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த ஒலுவில் - 02, பாலமுனை - 01, அட்டாளைச்சேனை- 08 ஆகிய கிராமப் பிரிவுகளில் இன்று (06) காலை 5.00 முதல் உத்தியோகபூர்வமாக தளர்த்தப்பட்டுள்ளது.

நேற்று (06) வரையும் எமது அட்டாளைச்சேனை பிரதேச சுகாதாரப் பிரிவில் 83 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதில் நேற்று முன்தினம் (05) மட்டும் அட்டாளைச்சேனையில் 10 பேர் தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். 

தற்போது தொற்றாளர்கள் 63 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.

எமது சுகாதாப் பிரிவில் 50 குடும்பமும் 200 தனிநபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒலுவில் நிருபர்

No comments:

Post a Comment