நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் முறையாக மேற்கொண்டு செல்ல அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Monday, January 4, 2021

நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் முறையாக மேற்கொண்டு செல்ல அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் அலி சப்ரி

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தடைப்பட்டிருந்த நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் முறையாக மேற்கொண்டு செல்ல அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொவிட் இரண்டாம் அலை காரணமாக தடைப்பட்டிருந்த நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் கொழும்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட் பாதுகாப்பு தொகுதிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் இரண்டாம் அலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் நீதிமன்ற நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள முடியாமல் போயிருந்தது.

அதனால் மீண்டும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். அதற்காக நீதிமன்ற சேவையில் இருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கொவிட் சுகாதார பாதுகாப்பு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பல குறைபாடுகள் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக கட்டடங்களுக்கு தேவையான மீள் செப்பனிடும் நடவடிக்கை, காரியாலய காப்பக வசதிகள் மற்றும் மலசலகூடங்கள் உட்பட ஏனைய அடிப்படை வசதிகளை விரைவில் பூர்த்திசெய்ய அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கின்றேன் என்றார்

மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டத்தரணிகள் நீதிமன்ற பணியாட்தொகுதிகளுடன் கலந்துரையாடி தேவையான வசதிகள் தொடர்பாக இதன்போது அமைச்சர் தேடிப்பார்த்தார்.

No comments:

Post a Comment