பிளாஸ்டர் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி இன்று கோலாகலமாக சாய்ந்தமருதில் ஆரம்பமானது ! - News View

Breaking

Post Top Ad

Friday, January 22, 2021

பிளாஸ்டர் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி இன்று கோலாகலமாக சாய்ந்தமருதில் ஆரம்பமானது !

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த பிளாஸ்டர் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி இன்று (23) காலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் கழக முகாமையாளர் எம்.எல். பஸ்மீரின் தலைமையில் ஆரம்பமானது.

பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வில் எல்.ஓ.எல்.சி. பைனாஸ் நிறுவன கிழக்கு மற்றும் ஊவா பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.எம். பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். 

மேலும் அதிதிகளாக சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய அதிபர் ஏ.சி.ஷரீபுத்தீன், உதவியதிபர் டீ.கே.எம். சிராஜ், கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட், கழக தலைவர் முகம்மட் இம்தாத், கழக பொதுச்செயலாளர் ஏ.சி.எம். நிஸார் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நான்கு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளத்துடன் மிகப்பெரும் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad