பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும் - தவிசாளர் எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Friday, January 22, 2021

பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும் - தவிசாளர் எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள், காணி உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என அப்பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களிலுள்ள காணிகள், உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது புற்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில் குறித்த காணிகளை பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும், தற்போது டெங்கு நுளம்பு பரவும் நிலை காணப்படுகின்றது. எனவே நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையிலுள்ள காணி உரிமையாளர்கள் தமது காணிகளை உடனடியாக துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தவறும் பட்சத்தில் பராமரிப்பற்ற காணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் உடைமையாக்கபடும் என மயூரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad