காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கிழக்குக் கொங்கோ கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 46 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மாகாண மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருமு பிராந்தியத்தில் இருக்கும் அந்த கிராமத்திற்கு உள்ளூர் பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டிருப்பதாக மாகாண உள்துறை அமைச்சர் அட்ஜியோ கிடி தொலைபேசி ஊடே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளார்.
“இன்று (வியாழக்கிழமை) மாலையாகும்போது உயிரிழப்பு 46 ஆக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி ஜனநாயகப் படை இதன் பின்னணியில் இருப்பமாக அவர் குறிப்பிட்டார்.
2019 தொடக்கம் குறித்த உகண்டா ஆயுதக் குழு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் படுகொலைகளில் கிழக்குக் கொங்கோவில் 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த புதிய வன்முறைகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டதை அடுத்து துருப்புகள் அந்த கிராமத்திற்குச் சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக உள்ளூர் இராணுவ பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொங்கோவின் கிழக்கு பிராந்தியம் உகண்டா, ருவாண்டா மற்றும் புருண்டி காடுகளின் எல்லைகளைக் கொண்டுள்ளது. இங்கு 100 க்கும் அதிகமான கிளர்ச்சிக் குழுக்கள் உள்ளன. அதில் அதிகமானவை 2003 இல் உத்தியோகபூர்வமாக முடிவுற்ற கொடிய உள்நாட்டுப் போரின் எச்சங்களாக உள்ளன.
No comments:
Post a Comment