இறக்குமதித் தடையால் ஒரு கிலோ 2000 ரூபா வரை விற்கப்படும் உளுந்து - எந்த உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என்கிறார் விவசாய அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

இறக்குமதித் தடையால் ஒரு கிலோ 2000 ரூபா வரை விற்கப்படும் உளுந்து - எந்த உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என்கிறார் விவசாய அமைச்சர்

நாட்டில் உளுந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து சந்தையில் உளுந்தின் விலை அதிகரித்துள்ளது.

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது.

இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் உளுந்து விலை அதிகரித்துள்ளதுடன், உளுந்திற்கு பாரிய தட்டுப்பாடும் நிலவுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட காலப்பகுதியில் 300 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோ உளுந்து தற்போது சுமார் 2000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

உளுந்து விலை அதிகரிப்பினால் சைவ உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உளுந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளமையினால் உள்ளூர் உளுந்து உற்பத்தியாளர்கள் நன்மை அடைந்துள்ளார்களா?

இலங்கையின் உளுந்து பயிர் செய்கைக்கு பிரசித்தி பெற்ற இடங்களில் வவுனியாவும் ஒன்று. எனினும், வவுனியாவில் சுமார் 1,3500 ஏக்கரில் உளுந்து விதைக்கப்பட்ட நிலையில் தொடரும் மழையுடனான வானிலையால் உளுந்து செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் எந்த உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

No comments:

Post a Comment