கல்முனையில் கடந்த 28 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

கல்முனையில் கடந்த 28 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

கடந்த 28 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்முனையிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று (25) காலை 6.00 மணி முதல் விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி முதல் கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீடு வீதி வரையான, கல்முனை வடக்கில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கல்முனை தெற்கில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இன்று (25) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1. கல்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
கல்முனை 1 C
கல்முனை 1E
கல்முனை 2
கல்முனை 2A
கல்முனை 2B
கல்முனை 3A

2. கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
கல்முனை 01 (MD)
கல்முனைக்குடி 01
கல்முனைக்குடி 02
கல்முனை 03 (MD)

இன்று (25) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1. அம்பாந்தோட்டை
அம்பலாந்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட இல 140 - போலான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மெல்கொணிய கிராமம்

2. பூஜாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு (MOH) 
பல்லியகொட்டுவ, கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு

No comments:

Post a Comment