மட்டக்களப்பில் இரு பொலிஸார் உட்பட 25 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

மட்டக்களப்பில் இரு பொலிஸார் உட்பட 25 பேருக்கு கொரோனா

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 25 பேருக்கு வியாழக்கிழமை (07) கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் ஏறாவூர் சுகாதார பிரிவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 20 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் ஒருவருக்கும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் ஒருவர் உட்பட 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதுடன் காத்தான்குடியில் 146 ஆதிகரித்துள்ளது. 

எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார முறைகளை பேணி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad