(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர பிரதேச ரயில் சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும். தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு சில ரயில் சேவைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் காமர தெரிவித்தார்.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவை நாளை முதல் வழமைக்கு திரும்பும் இதற்கமைய கொழும்பு கோட்டை - பதுள்ளை நோக்கி புறப்படும் பொடிமெனிகே, கொழும்பு - கண்டி நோக்கி புறப்படும் கடுகதி ரயில், கல்கிஸ்சை - காங்கேசன்துறை நோக்கி செல்லும் யாழ்தேவி, கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை நோக்கி புறப்படும் உத்ரதேவி மற்றும் கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு நோக்கி புறப்படும் உதயதேவி ஆகிய ரயில் கங்கள் வழமையான நேர அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடுத்தப்படும்.
மேலதிகமாக மருதானை - பெலியத்தை நோக்கி புறப்படும் தெற்கு கடுகதி ரயில், மாத்தறை - கொழும்பு கோட்டை நோக்கி புறப்பபும் சிக்ரகாமி ரயில் ஆகியன சேவையில் இணைத்துக் கொள்ளப்படும்.
ரயில் போக்கு வரத்து சேவையில் இடை நிறுத்தப்பட்டுள்ள இதர சேவைகள் அனைத்தும் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் பரிந்துரைத்துள்ள அறிவுறுத்தல்கள் அலுவலக ரயில்கங்களில் செயற்படுத்தப்படுவதில்லை. கடந்த நாட்களில் பொது பயணிகள் ரயில் நிலையங்களில் இவ்விடயம் குறித்து முறைப்பாடளித்துள்ளார்கள்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்றின் பின்னர் ரயில் சேவையின் பாதுகாப்பு ஒப்பீட்டளவில் மாற்றமடைந்திருந்தாலும் அவை திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை.
ரயில் சேவையினை நவீனமயப்படுத்தவும், தற்போதைய நெருக்கடியான சவாலை வெற்றி கொள்ளவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தயாரித்த திட்டங்களை ரயில் திணைக்களம் இதுவரையில் செயற்படுத்தவில்லை.
ஆகவே பொதுப் பயணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணங்களை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment